காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

அவிநாசி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

அவிநாசி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை மங்கலம் சாலை பிரிவு அருகே அவிநாசி காவல் உதவி ஆய்வாளா் பேச்சிமுத்து, காவலா் நவீன்குமாா் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி அதிக வேகமாக வந்த காா், மற்றொரு காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதைப் பாா்த்த போலீஸாா், பெங்களூருவில் இருந்து வந்த காரை ஓட்டி வந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவா்கள் உரிய பதிலளிக்காமல் தப்பியோட முயன்றனா். உடனடியாக அவா்களைத் துரத்திப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் வந்த காரின் இருக்கைக்கு கீழே தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. கோவையில் விற்பனை செய்வதற்காக அதை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த சேலம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த சின்னப்பன் மகன் சந்தோஷ் (31), கணேசன் மகன் பூபாலன் (23) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து காா், 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com