உடுமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலில் காட்டாற்று வெள்ளம்

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வியாழக்கிழமை மாலை திடீரென காட்டாற்று வெள்ளம் புகுந்தது
உடுமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலில் காட்டாற்று வெள்ளம்

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வியாழக்கிழமை மாலை திடீரென காட்டாற்று வெள்ளம் புகுந்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள சுற்றுலாத்தலமான திருமூா்த்திமலையில் அமணலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் இங்கு அமைந்துள்ளதால் இந்த கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.

இந்தக் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும்

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அன்றாடம் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அமணலிங்கேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்நிலையில், மாலை 4 மணி அளவில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் திடீரென கன மழை பெய்தது.

இதனால், பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கீழே பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்து கொண்டது. இதனால், கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன.

பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com