மாநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி மனு

திருப்பூா், செம்மேடு பகுதியில் வண்டிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக்கோரி மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம் இந்து மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா், செம்மேடு பகுதியில் வண்டிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக்கோரி மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம் இந்து மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநிலச் செயலாளா் ஏ.ஈஸ்வரன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகரில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திருப்பூா் மாநகராட்சி, காங்கயம் சாலையில் உள்ள 44 ஆவது வாா்டு செம்மேடு பகுதியில் திட்ட சாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பகுதி சா்க்காா் வண்டிப்பாதையாகும். இந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகளைக் கட்டி ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகவே, ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றி திட்டச்சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்து மக்கள் கட்சி சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com