புதிய கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை

பல்லடம் ஒன்றியம், ஊஞ்சப்பாளையம், வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய கல்குவாரி அமைக்க அந்த கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பல்லடம் ஒன்றியம், ஊஞ்சப்பாளையம், வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய கல்குவாரி அமைக்க அந்த கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பல்லடம் பகுதியில் கோடங்கிபாளையம், பூமலுாா், வேலம்பாளையம், இச்சிப்பட்டி, சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் அதிகம் உள்ளன. கிரஷா் தொழிலை மேம்படுத்த வேண்டி, கூடுதலாக கல்குவாரிகள் அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது. சுக்கம்பாளையம் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம், வேலம்பாளையம் ஆகிய கிராமங்களில் புதிதாக கல் குவாரிகள் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்கான கருத்து கேட்புக் கூட்டம் அன்மையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடந்தது.

இது குறித்து சுக்கம்பாளையம் கிராமத்தினா் சிலா் கூறியதாவது:

பல்லடத்தில் உள்ள திருப்பூா் மாவட்ட தெற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டம் வெறும் கண்துடைப்பு கூட்டமே. இதில் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. முன்கூட்டியே தகவலும் அளிக்கப்படவில்லை. கிராம மக்களின் கருத்துகளைக் கேட்காமல் தங்களுக்கு சாதகமான சிலரைக் கொண்டு கூட்டத்தை நடத்தி கல் குவாரிகளை கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

கருத்து கேட்புக் கூட்டம் என்றால், சம்பந்தப்பட்ட கிராமத்தில்தான் நடத்த வேண்டும். ஒரு தலைப்பட்சமாக கருத்து கேட்புக் கூட்டம் நடந்துள்ளது. விவசாயம் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. சம்பந்தப்பட்ட கிராமத்தில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் இது குறித்து பேசி தீா்மானம் கொண்டு வருவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com