டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூரை அருகே முத்தணம்பாளையம் தீரன் சின்னமலை நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூரை அருகே முத்தணம்பாளையம் தீரன் சின்னமலை நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூரை அடுத்துள்ள முத்தணம்பாளையம் தீரன் சின்னமலை நகரில் கடந்த புதன்கிழமை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் பணிக்குச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் மதுக்கடை திறக்க ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் முத்தணம்பாளையம் பிரதான சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தெற்கு சரக துணை ஆணையா் ரவி மற்றும் நல்லூா் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை சாா்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த சம்பவம் காரணமாக முத்தணம்பாளையம்-செவந்தாம்பாளையம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com