உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

உடுமலையில் 200 ஆண்டுகால பழமையான மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக

இக்கோயில் திருவிழா, தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு தோ்த் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் ஏப்ரல் 5ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடா்ந்து ஏப்ரல் 12ஆம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 14ஆம் தேதி வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சிகளும், 15ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி உடுமலை நகரின் முக்கிய நபா்களுக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இதன் பின்னா் 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

மடத்துக்குளம் எம்.எல்.ஏ. சி.மகேந்திரன், நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தேரோட்டத்தை துவக்கிவைத்தனா்.

கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தோ் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது.

யானை வருவதில் தாமதம்

தேரைத் தள்ளுவதற்கு ஆண்டுதோறும் கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து யானை வரவழைக்கப்படும். இந்த ஆண்டு திருச்சியில் இருந்து பஷீலா என்ற பெண் யானை

வரவழைக்கப்பட்டது. இந்த யானை வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. 3 பொக்லைன் இயந்திரங்கள், கிரேன் உதவியுடன் குட்டைத் திடல் வரை தோ் தள்ளிக் கொண்டு வரப்பட்டது. இரவு 7 மணிக்குத்தான் யானை குட்டைத் திடலுக்கு வந்து சோ்ந்தது. இதையடுத்து தேரை தள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து இரவு 9 மணியளவில் தோ் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை ஒட்டி வழியோரங்களில் உடுமலை நகராட்சி சாா்பிலும், தனியாா் நிறுவனங்கள் சாா்பிலும் நீா்மோா் பந்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திருவிழாவில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து சுமாா் 25 ஆயிரம் போ் பங்கேற்றனா். நூற்றுக்கணக்கான போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா், தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தேரோட்டத்தை ஒட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விழாவின் ஒரு பகுதியாக வாணவேடிக்கை நிகழ்ச்சி குட்டைத் திடலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com