திருப்பூரில் தனியார் மதுபான கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் 

திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூர்: திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கூடத்துக்கு வரும் நபர்களால் அப்பகுதியில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வந்தது. மேலும் அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில் மதுக் கூடத்திற்கு அருகிலேயே சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இடையூறாக உள்ள மதுபான கூடத்தை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியே அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் மதுபான கூடம் இன்னும் அகற்றப்படவில்லை என்று தெரிகிறது. 

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மதுபான கூடத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த பேச்சுவார்த்தையில் வரும் வியாழக்கிழமை டாஸ்மார்க் மண்டல மேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதன்பேரில் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com