வேலைவாய்ப்பற்றோா் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாத பொதுப்பிரிவினருக்கு மாதம் ரூ.200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. மேலும், 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் தோ்ச்சி பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.750, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 மாதந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை. மனுதாரா் முற்றிலும் வேலையில்லாதவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.

ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றோ படிவத்தினைப் பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதே வேளையில், ஏற்கெனவே வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான சுயஉறுதிமொழி ஆவணத்தை வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com