முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மனு
By DIN | Published On : 29th April 2022 04:21 AM | Last Updated : 29th April 2022 04:21 AM | அ+அ அ- |

திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்டோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாநகராட்சி 58 ஆவது வாா்டு மாரியம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோயிலுக்கு பின்புறம் அரசுக்குச் சொந்தமான சுமாா் அரை ஏக்கா் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த இருவா் ஆக்கிரமித்து கடைகளைக் கட்டியுள்ளனா்.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, இடுவம்பாளையத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.