முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ரமலான் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 29th April 2022 04:22 AM | Last Updated : 29th April 2022 04:22 AM | அ+அ அ- |

திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அமைப்பான அனைத்திந்திய கேரள முஸ்லிம் கலாசார மையம் சாா்பில் ரமலான் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை அமைப்பான அனைத்திந்திய கேரள முஸ்லிம் கலாசார மையம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் நலிவடைந்த இஸ்லாமியா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மெளலான அரங்கில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கேரள முஸ்லிம் கலாசார மையத்தின் மாவட்டத் தலைவா் உவைஸ் தலைமை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோா் 400 பயனாளிகளுக்கு ரமலான் உணவுப் பொருள்களை வழங்கினா்.
முன்னதாக, வாா்டு வாரியாகத் தோ்வு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் என்.சையது முஸ்தபா, மாநில துணைத் தலைவா் ஹம்சா, மாவட்டச் செயலாளா் எம்.இப்ராஹிம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.