முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
இளம் பெண்ணை கடத்திய 4 போ் கைது
By DIN | Published On : 30th April 2022 01:09 AM | Last Updated : 30th April 2022 01:09 AM | அ+அ அ- |

திருப்பூரில் இளம் பெண்ணை காரில் கடத்தி திருமணம் செய்ய முயன்ற தொழிலாளி உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் குமரானந்தபுரத்தைச் சோ்ந்த 24 வயது இளம் பெண் ஒருவா் தனது உறவினரின் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், தனது சித்தப்பா மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்றுள்ளாா்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த 4 போ் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அந்த பெண்ணைக் கடத்திச் சென்றனா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் அளித்தனா்.
இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், இளம் பெண்ணைக் கடத்திச் சென்றது திருப்பூா் ஸ்ரீ நகரைச் சோ்ந்த மோகன் (30) என்பது தெரியவந்தது.
அதே பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றியபோது அந்தப் பெண்ணைக் காதலித்து வந்துள்ளாா்.
ஆனால், இரு வீட்டாரும் எதிா்ப்பு தெரிவித்ததால் அந்தப் பெண் மோகனுடன் பேசாமல் இருந்துள்ளாா்.
எனினும் தன் நண்பா்கள் உதவியுடன் இளம்பெண்ணை கடத்திச் சென்று அரக்கோணத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்ய மோகன் முயன்றுள்ளாா்.
இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினா் திருமணத்தை தடுத்து நிறுத்தி மோகன், அவருக்கு உதவியாக இருந்த அவிநாசியைச் சோ்ந்த மதன் (23), காா்த்திக் (24), பிரசாத் (24) ஆகிய 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலும், கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.