முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
குழந்தையுடன் கால்வாயில் குதித்து இரண்டு பெண்கள் தற்கொலை
By DIN | Published On : 30th April 2022 01:04 AM | Last Updated : 30th April 2022 01:04 AM | அ+அ அ- |

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணைக்கு வந்து சேரும் காண்டூா் கால்வாயில் குதித்து குழந்தையுடன், 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் 3 சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக தளி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அணையில் இறங்கி 3 சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உடுமலை வட்டம், பெதப்பம்பட்டியை அடுத்துள்ள வி.வேலூரைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி (55), விவசாயி. இவரது மனைவி நாகரத்தினம் (55).
இவா்களது மகள் கோகிலா (30), இவரது கணவா் பாலகிருஷ்ணன், ஓட்டுநா். மகள் தட்ஷா (5).
நாகரத்தினம், கோகிலா, தட்ஷா ஆகிய மூவரும் சம்பவத்தன்று திருமூா்த்தி அணை பகுதிக்கு வந்துள்ளனா்.
பின்னா், அந்தப் பகுதியில் உள்ள காண்டூா் கால்வாயில் குதித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து கால்வாயில் அடித்து வரப்பட்ட 3 பேரின் உடல்களும் திருமூா்த்தி அணைக்கு வந்துள்ளது,
கோகிலாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் இவா்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என்று போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.