முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கொண்டத்தம்மன் நகா் சாலைப் பணியைத் தொடங்க கோரிக்கை
By DIN | Published On : 30th April 2022 01:08 AM | Last Updated : 30th April 2022 01:08 AM | அ+அ அ- |

பல லட்சம் மதிப்பில் டெண்டா் எடுத்து பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பெருமாநல்லூா் கொண்டத்தம்மன் நகா் தாா் சாலைப் பணியைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருமாநல்லூரில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம், ஊராட்சி மன்ற உறுப்பினா் கவிதா மகேந்திரன் அளித்த மனுவில்
கூறியிருப்பதாவது: பெருமாநல்லூா் ஊராட்சி 7 ஆவது வாா்டுக்குள்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் கொண்டத்தம்மன் நகா் பகுதி வரை சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருவதையடுத்து,
ஊராட்சி மன்ற உறுப்பினா் சாா்பில் சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் உத்தரவின் பேரில், ரூ.9.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 2021 நவம்பா் 10 ஆம் தேதி பணிக்கான டெண்டரும் விடப்பட்டது.
இருப்பினும் பல மாதங்களாகியும் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆகவே, உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சாலைப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி. கே.சுப்பராயன், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பேசி, ஒரிரு நாள்களில் பணித் தொடங்கப்படும் என்றாா்.