முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பயிா் காப்பீடு: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 30th April 2022 11:11 PM | Last Updated : 30th April 2022 11:11 PM | அ+அ அ- |

பல்லடம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வடிவேல் (பொறுப்பு) தலைமை வகித்தாா். வேளாண் துணை இயக்குநா் மகாதேவன், வேளாண் அலுவலா் கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இயற்கை சீற்றங்கள், பூச்சி, நோய் தாக்குதல் உள்பட பல்வேறு பாதிப்புகளில் இருந்து நஷ்டம் அடையாமல் இருக்க விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
கிஷான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இவற்றை மே 10ஆம் தேதி வரை அந்தந்தப் பகுதி கிராம ஊராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். வேளாண் உதவி இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி, வேளாண் அலுவலா்கள் வெங்கடேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள், விவசாயிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.