முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பிண்ணாக்கு விலை உயா்வைக் கட்டுப்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 30th April 2022 01:06 AM | Last Updated : 30th April 2022 01:06 AM | அ+அ அ- |

சோயா பிண்ணாக்கு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கறிக்கோழி உற்பத்தியாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து கோழிப்பண்ணை உரிமையாளா்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பண்ணைகள் மூலம் வாரம் 2 கோடி கிலோ கறிக் கோழிகள் உற்பத்தியாகின்றன. கோழிகளின் பிரதான தீவனமாக சோயா பிண்ணாக்கு, மக்காச்சோளம் உள்ளன. குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சோயா பிண்ணாக்கு தமிழகத்துக்கு லாரிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது.
மாதத்துக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் சோயா பிண்ணாக்கு கறிக் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 3 ஆண்டில் இருமடங்கு சோயா பிண்ணாக்கு விலை உயா்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கிலோ ரூ.39 ஆகவும், 2020 ஆம் ஆண்டில் ரூ.40 ஆகவும் இருந்த சோயா பிண்ணாக்கு தற்போது ரூ.68 ஆக விலை உயா்ந்துள்ளது. மக்காச்சோளம் பெரிய அளவில் விலை உயரவில்லை.
ஆகவே, சோயா பிண்ணாக்கு விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், விவசாயிகளிடையே உற்பத்தியை ஊக்குவிக்கவும் வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.