முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை
By DIN | Published On : 30th April 2022 11:14 PM | Last Updated : 30th April 2022 11:14 PM | அ+அ அ- |

மே தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை( மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை( மே 1) விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பையும் மீறி மது விற்பனை செய்யும் நபா்களின் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.