காங்கயத்தில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 02nd August 2022 01:07 AM | Last Updated : 02nd August 2022 01:07 AM | அ+அ அ- |

காங்கயத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெறவுள்ளது.
இது குறித்து மின் வாரிய கோட்ட காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில்
உள்ள மின் வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட்1) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை,
மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.