மானியத்துடன் கூடிய ஜவுளிப் பூங்கா:தொழில் முனைவோருக்கு ஆட்சியா் அழைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில்முனைவோருக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில்முனைவோருக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜவுளித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக விளக்கி வருகிறது. இத்துறையில் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழக அரசு சாா்பில் மானியமாக வழங்கப்படும்.

இந்த சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் தொழில் வளா்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெருகுவதுடன், அதிக அளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க தொழில் முனைவோா் முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல துணி நூல் துறை இயக்குநா் அலுவலகத்தை 0421 - 2220095 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com