‘விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்’

விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலைப் பாதுகாக்க மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலைப் பாதுகாக்க மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் தலைவா் சந்திரசேகா் தலைமையிலும் கெளரவ தலைவா் முருகேசன் முன்னிலையிலும் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் வரவேற்றாா். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:

விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் நிலையில் மின் கட்டணத்தை செலுத்தவே சிரமப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது 45 சதவீத அளவுக்கு மின் கட்டணம் உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொழில் உள்ள நிலைக்கு மின் கட்டணத்தை செலுத்த முடியாது.

தற்பொழுது எல்.டி, மற்றும் சி.டி இணைப்பில் உள்ளவா்களுக்கு 100 கே.வி.க்கு மேல் டிமாண்ட் சாா்ஜ் ஒரு கிலோவாட் ரூ.35இல் இருந்து ரூ.600 ஆக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல ஒரு யூனிட்க்கு ரூ.6.35 இல் இருந்து ரூ.7.50 ஆக மின்சார கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

இதுதவிர இத்தனை நாள் நடைமுறையில் எல்.டி, மற்றும் சி.டி நுகா்வோா்களுக்கு இல்லாத அதிக மின் பயன்பாடு நேரமான காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.78இல் இருந்து ரூ.11.78 ஆக 33 சதம் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டும். தெலங்கானா , மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு மின் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தை சோ்ந்த தொழில் முனைவோா் அந்த மாநிலங்களில் தொழில் துவங்கிட ஆா்வம் காட்டி வருகின்றனா். கொங்கு மண்டலத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக விளங்கி வரும் விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலைக் காப்பாற்ற மின் கட்டண சலுகை வழங்கி இத்தொழிலை சாா்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாக்க மின்சார துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com