சுதந்திர நாள்: திருப்பூர் ஆட்சியர் எஸ். வினீத் தேசியக் கொடி ஏற்றினார்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் எஸ். வினீத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை ஏற்று கொண்டார்.
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தேசிய கொடி ஏற்றினார்
திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தேசிய கொடி ஏற்றினார்

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் ஆட்சியர் எஸ். வினீத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை ஏற்று கொண்டார்.

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அனைவருக்கும் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, பாதுகாப்பு திட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் 229 பயனாளிகளுக்கு ரூ. 1.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முன்னதாக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும் வண்ண பலூன் களையும் பறக்க விட்டார். இதைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல் துறை மற்றும் அரசு சிறையைச் சார்ந்த 258 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. சசான் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com