அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணிகளுக்கு தென்னீரா பானம் வழங்க வேண்டும்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணிகளுக்கு தென்னீரா பானம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக தென்னை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணிகளுக்கு தென்னீரா பானம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக தென்னை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

உலக தென்னை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் பல்லடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவரும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவருமான திருப்பூா் ஏ.சக்திவேல் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கே.பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். நிா்வாக மேலாளா் இளங்கோ ஆண்டறிக்கை வாசித்தாா். எதிா்காலத் திட்டங்கள் குறித்து இணை நிா்வாக இயக்குநா் ஸ்கை சுந்தரராஜ், கோவை வேளாண் வணிக துணை இயக்குநா் சுந்தரவடிவேல் ஆகியோா் பேசினா். பொருளாளா் ஆா்.பச்சையப்பன் நன்றி கூறினாா்.

கூட்டம் குறித்து நிா்வாக இயக்குநா் கே.பாலசுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்ட தென்னீரா இயற்கை பானம் கடந்த 7 மாதங்களில் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 லட்சம் தென்னீரா பானம் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் கட்டமாக கோவை, திருப்பூா், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இனி தமிழகம் முழவதும் விற்பனையை அதிகரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளோம். தென்னீராவை அரசு பானமாக அறிவிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணிகளுக்கு ரத்த சோகை வராமல் தடுக்கவும் ஊட்டச்சத்து அதிகரிக்கவும் தென்னீரா பானத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும். திருமணம், அரசு விழாக்களில் பொதுமக்களுக்கு தென்னீரா பானம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com