10 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியகாந்தி விதை விற்பனையில் சாதனை

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1.57 கோடிக்கு சூரியகாந்தி விதை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1.57 கோடிக்கு சூரியகாந்தி விதை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

மாநிலத்தின் பிரதான சூரியகாந்தி விதை விற்பனைச் சந்தையாக வெள்ளக்கோவில் விற்பனைக் கூடம் திகழ்கிறது. இதனால் பல மாவட்ட விவசாயிகள் இங்கு வருகை தருகின்றனா். இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்று வரும் நிலையில், வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நீடித்தது.

இந்த வார ஏலத்துக்கு பல்வேறு மாவட்டங்களைச் 359 விவசாயிகள் தங்களுடைய 5, 049 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 248 டன்.

விலை கிலோ ரூ.51.29 முதல் ரூ.70.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.65.49. கடந்த வார சராசரி விலை ரூ.67.14. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1.57 கோடி அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com