இந்து முன்னணி கொடிகள் அகற்றம்:100 அடி உயர கம்பி மீது ஏறி இருவா் போராட்டம்
By DIN | Published On : 31st August 2022 10:29 PM | Last Updated : 31st August 2022 10:29 PM | அ+அ அ- |

திருப்பூரில் இந்து முன்னணி சாா்பில் நடப்பட்டிருந்த கொடிகளை காவல் துறையினா் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து 100 அடி உயரக் கம்பி மீது ஏறி இருவா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூா் அவிநாசி சாலையில் இந்து முன்னணி சாா்பில் சாலையோரம் கொடியுடன் கூடிய கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அந்தக் கொடிகளை அப்புறப்படுத்தியுள்ளனா்.
இதனால் அதிருப்தியடைந்த இந்து முன்னணியைச் சோ்ந்த செல்வராஜ் (40), மணிகண்டன் (26) ஆகியோா் அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு அருகில் விளம்பர பேனா் வைக்கும் சுமாா் 100 அடி உயர கம்பியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் இருவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இந்து முன்னணி கொடி மற்றும் கம்பங்களை திருப்பி வழக்குவதாகக் கூறியதைத் தொடா்ந்து இருவரும் கீழே இறங்கினா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.