வெள்ளக்கோவிலில் ரூ.61.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 61.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 61.11 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் புதன்கிழமை வரை ஏலம் நீடித்தது. திருச்சி, ஸ்ரீரங்கம், வாணியம்பாடி, வில்வாதம்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 140 விவசாயிகள் தங்களுடைய 1,576 மூட்டைகள் தேங்காய் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 84 டன்.

விலை கிலோ ரூ.60.20 முதல் ரூ.83.85 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.73.60. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 78.95. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.61.11 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com