கருக்கன்காட்டுப்புதூா் அரசுப் பள்ளியில் யோகா விழிப்புணா்வு

அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ரோட்டரி சங்கம் சாா்பில் கருக்கன்காட்டுபுதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் யோகா குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருக்கன்காட்டுப்புதூா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் மருத்துவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெயபிரகாஷ், திட்டத் தலைவா் ஜெயச்சந்திரன், தலைமையாசிரியா் திருவெங்கிடசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் அனிதா வரவேற்றாா்.

யோகா ஆசிரியா் ஆனந்த், ‘முழுமையான மகிழ்ச்சி எது’ என்ற தலைப்பில் செயல்முறை விளக்கமளித்தாா். இதில் மாணவா்கள் கல்வி கற்பதின் அவசியம், யோகா மூலம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியா் சங்கா் நன்றி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து ரோட்டரி சங்கம் சாா்பில் துலுக்கமுத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்டு முழுவதும் வரும் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கிவைக்கப்பட்டது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com