மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ர மறியல் போராட்டத்துக்கு கட்சியின் 2ஆவது மண்டல செயலாளா் வி.எஸ்.சசிகுமாா் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. மேலும், அரிசி, தயிா், வெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளியோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பின்னலாடை உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ஆகவே, மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறுகிறது என்றனா்.

இதில், மாநகா் மாவட்டச் செயலாளா் ரவிசந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம், அவிநாசி சாலை காந்தி நகா், தாராபுரம் சாலை புதூா்பிரிவு உள்ளிட்ட 4 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், புதிய பேருந்து நிலையம், காந்தி நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா். மற்ற இரு இடங்களிலும் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். அதேபோல, திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், உடுமலை, ஊத்துக்குளி, அவிநாசி, திருமுருகன்பூண்டி, பல்லடம் உள்ளிட்ட 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் காங்கயத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் திருப்பூா் புறநகா் மாவட்டப் பொருளாளா் வி.பழனிசாமி தலைமை தாங்கினாா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com