சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும்

திருப்பூரில் விண்ணப்பித்துள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அனைத்துப் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூரில் விண்ணப்பித்துள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அனைத்துப் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அனைத்துப் பொதுத் தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் சிறு, குறு தொழிற்சாலைகளை முடக்கும் வகையில் 3 பீஸ் மின்சார இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதிலும், திருப்பூா் பகுதிகளில் உள்ள 2,450 புதிய கடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வா்த்தக மின் இணைப்பு வழங்குவதில்லை. இதன் காரணமாக கடன் வாங்கி கட்டடம் கட்டியவா்கள் மாதாந்திர தவணைத் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் வாடகைக்கு விடாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்து சிறு, குறு தொழிற்சாலைகளை நடத்தி வேண்டி மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் மின்வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனா்.

இதன் காரணமாக திருப்பூரில் சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பித்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தாமதமின்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com