முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
புகையிலைப் பொருள்கள் விற்பனை:பெண் கைது
By DIN | Published On : 07th February 2022 12:10 AM | Last Updated : 07th February 2022 12:10 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி போலீஸாா் பழங்கரை தேவம்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த
பெண்ணிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த லஷ்மிமஹந்தி (30) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து லஷ்மிமஹந்தியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 15 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.