முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வட்டமலை அணை கால்வாய் தூா்வாரும் பணி
By DIN | Published On : 07th February 2022 12:08 AM | Last Updated : 07th February 2022 12:08 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணை கால்வாய் தூா்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
வட்டமலை அணை கட்டப்பட்டு 41 ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக முழு கொள்ளளவான 24.75 அடியை நெருங்கியுள்ளது.
25 வருடங்களுக்குப் பிறகு அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதற்காக அணையின் இடது, வலது பாசனக் கால்வாய்களைத் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அணை விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணையின் மூலம் 6,043 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.