கழிவுகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூா் அருகே குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூா் அருகே குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட செல்லாண்டியம்மன் துறை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா்.

இக்குடியிருப்பில் பல மாதங்களாக கழிவு நீா் அகற்றப்படாமல் அதே பகுதியில் தேங்கியுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்ததை நடத்தினா்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com