நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதையை

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், மேம்பாலத்துக்கு அடியில் உள்ள சாலைகளில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பழைய பேருந்து நிலைய மேம்பாலத்துக்கு அடியில் வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிலா் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனா்.

இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

ஆகவே, நடைபாதைகளில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com