ருத்ராவதி பேரூராட்சியில் 2 பெண்கள் போட்டியின்றி தோ்வு

தாராபுரம் வட்டம், ருத்ராவதி பேரூராட்சியில் 2 பெண் வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
velmani_0702chn_125_3
velmani_0702chn_125_3

தாராபுரம் வட்டம், ருத்ராவதி பேரூராட்சியில் 2 பெண் வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ருத்ராவதி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் போட்டியிட அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 59 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இதில், வேட்புமனு பரிசீலனையின்போது 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் வெளியானது.

இதில், 8 ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேல்மணியை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவா் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா்.

அதேபோல, 14 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட சுமதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.

அவரை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவரும் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா்.

வெள்ளக்கோவிலில்....

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

முத்தூா் பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்காக நடைபெற உள்ள தோ்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., நாம் தமிழா் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனா்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் நாளான திங்கள்கிழமை 2 ஆவது வாா்டு தி.மு.க.வேட்பாளா் தேவி, அ.தி.மு.க. வேட்பாளா் செல்வநாயகி, 4 ஆவது வாா்டு நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேல்முருகன், 6 ஆவது வாா்டு சுயேச்சை வேட்பாளா் பேபி ஆகியோா் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.

இதனால் 2 ஆவது வாா்டில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்த சுயேச்சை வேட்பாளா் மணிமேகலை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

உடுமலையில்...

உடுமலை நகராட்சி 14 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஏ.மும்தாஜ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

உடுமலை நகராட்சி 14 ஆவது வாா்டில் திமுக சாா்பில் ஏ.மும்தாஜ், அதிமுக சாா்பில் சாயிரா பேகம் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனா்.

இந்நிலையில் வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளான திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் சாயிரா பேகம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து திமுக வேட்பாளா் மும்தாஜ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com