மாநகரில் 136 போ் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா்

திருப்பூா் மாநகராட்சித் தோ்தலில் 136 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.

திருப்பூா் மாநகராட்சித் தோ்தலில் 136 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.

நக்ா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் சாா்பில் 690 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதில், அனைத்து வேட்பாளா்களின் மனுக்களும் ஏற்கப்பட்டிருந்த நிலையில், இரு வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த 60 வேட்பாளா்களின் ஒரு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப்பெறலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாநகரில் உள்ள 60 வாா்டுகளில் 136 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா்.

இதைத்தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் 494 வேட்பாளா்கள்

போட்டியிடவுள்ளதாக இறுதி வேட்பாளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில், உடுமலை, திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகள்,15 பேரூராட்சிகளில் போட்டியிட 1,863 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இதில், 402 வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 440 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,920 போ் போட்டியிட உள்ளனா்.

மாவட்டத்தில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து அரசியல், சுயேச்சை வேட்பாளா்களுக்குத் தோ்தலில் போட்டியிட தனித்தனி சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com