அவிநாசி அருகே விவசாய விளை நிலத்தில் ரசாயன நிறுவனம் அமைக்க எதிர்ப்பு 

அவிநாசி அருகே பொங்கலூர் தொட்டிபாளைத்தில் விவசாய விளை நிலத்தில் ரசாயன நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
ரசாயன நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்று கூடிய பொதுமக்கள்.
ரசாயன நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்று கூடிய பொதுமக்கள்.

அவிநாசி அருகே பொங்கலூர் தொட்டிபாளைத்தில் விவசாய விளை நிலத்தில் ரசாயன நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பொங்கலூர் ஊராட்சி பகுதியில் விவசாயத் தொழிலே பிரதானமாக உள்ளது. குறிப்பாக தொட்டிபாளையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஏக்கர் விளை நிலங்களை நம்பி உள்ளனர். இந்நிலையில், தொட்டிபாளையம் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனியார் ரசாயன நிறுவனம் அமைக்கவுள்ளதாக அறிந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது- இப்பகுதியில் அதிகப்படியாக விளை நிலத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பியுள்ளோம். இதற்கிடையில் இங்கு ரசாயன நிறுவனம் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர் மாசுபட்டு, விளை நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படும், பொதுமக்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படும் ஆகவே ரசாயன நிறுவனம் அமைக்க கூடாது. ஊராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளோம். 

ரசாயன நிறுவனம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணி.

ஆகவே ஊராட்சி அனுமதி வழங்கக் கூடாது என்றனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விமலா செல்வராஜிடம் கேட்ட போது, தனியார் ரசாயன நிறுவனம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு அனுமதி கோரியிருந்தனர். இருப்பினும் விவசாயத்திற்கு எதிரானதால், அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com