திருமுருகன்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ. பிரசாரம்: தடி ஊன்றி பங்கேற்ற திமுக மூத்த உறுப்பினர்

திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திமுக மூத்த உறுப்பினர் தடி ஊன்றி வந்து பங்கேற்றதால் அனைவர
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் | திமுக மூத்த உறுப்பினர் அருணாசலம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் | திமுக மூத்த உறுப்பினர் அருணாசலம்

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திமுக மூத்த உறுப்பினர் தடி ஊன்றி வந்து பங்கேற்றதால் அனைவரும் மகிழ்ந்தனர்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இராக்கியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வென்று, திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 9 மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றது திமுக கூட்டணி.

இன்றைக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உண்மையிலேயே அதிமுக நண்பர்களே மனசாட்சியுடன் சொல்லுங்கள் நீங்கள் போட்டியிடுகிற வாய்ப்பு திமுக தலைவர் மு. க. ஸ்டாலினால் கிடைத்துள்ளது. ஆட்சி பொறுப் பேற்று 8 மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 10ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அடித்த கொள்ளைக்கு அளவில்லை.

இதை அறப்போர் இயக்கம் என்ற சமூக அமைப்பு கூறியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்படுவார்கள்.  ஆகவே மக்கள் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு வாக்களியுங்கள் என்றார்.

இப்பிரசாரம் துவங்கும் முன் 90 வயதுக்கு மேற்பட்ட திமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர் அருணாசலம் தடி ஊன்றி வந்து பங்கேற்றார். அவருக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com