அவிநாசி,  திருமுருகன்பூண்டியில் வாக்குப்பதிவு 

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
அவிநாசி,  திருமுருகன்பூண்டியில் வாக்குப்பதிவு 

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 11,070 ஆண் வாக்களர்களும், 11,905 பெண் வாக்களர்களும் என மொத்தம் 22, 975 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 29 வாக்குச் சாவடி மையங்களிலும், திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 13,725 ஆண் வாக்களர்களும், 13, 805 பெண் வாக்களர்களும், ஒரு இதர வாக்காளர்களும் என மொத்தம் 27,531 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு 35 வாக்குச்சாவடி மையங்களிலும்  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களித்தனர். குறிப்பாக பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகர்ப்புற தேர்தலையொட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தினசரி மார்க்கெட், திரையரங்குகள் உள்ளிட்டவை விடுமுறை விடப்பட்டிருந்ததால், தொழிலாளர்கள் எளிதாகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com