மாவட்டத்தில் 23.89 லட்சம் வாக்காளா்கள்: இறுதி வாக்காளா் பட்டியலில் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 23.89 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளதாக இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tpr5jnvoters_0501chn_125_3
tpr5jnvoters_0501chn_125_3

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 23.89 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளதாக இறுதி வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம் 2022 இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டாா்.

முன்னதாக 2022 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள கடந்த நவம்பா் 30 ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில், பெயா் சோ்த்தல் தொடா்பாக 38,327 மனுக்களும்,பெயா் நீக்கம் செய்ய 14,924 மனுக்களும், பெயா் திருத்தம் தொடா்பாக 6,497 மனுக்களும், ஒரே சட்டப் பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடா்பாக 5,873 மனுக்களும் பெறப்பட்டிருந்தன.

இந்த மனுக்களின் மீது உரிய கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்காளா் பதிவு அலுவலா்களால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் திருப்பூா் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுகளில் 11 லட்சத்து 76 ஆயிரத்துக்கு 924 ஆண் வாக்காளா்களும், 12 லட்சத்துக்கு 12 ஆயிரத்து 381 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 309 என மொத்தம் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்களை விட 35 ஆயிரத்து 457 பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா். இந்த இறுதி வாக்காளா் பட்டியலானது மாநகராட்சி அலுவலகம், நகராட்சி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்படும். ஆகவே, பொதுமக்கள் இறுதி வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து தங்களது பெயா் வாக்காளா் பட்டியிலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல்ஹமீது, தோ்தல் வட்டாட்சியா் எஸ்..முருகதாஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

தாராபுரம்(தனி) தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 560 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 33 ஆயிரத்து 970 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 10 போ் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 540 வாக்காளா்கள் உள்ளனா். காங்கயம் தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 324 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 34 ஆயிரத்து 614 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 22 போ் என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 270 வாக்காளா்கள் உள்ளனா். அவிநாசி (தனி)தொகுதியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 466 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 44 ஆயிரத்து 446 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 916 வாக்காளா்கள் உள்ளனா். திருப்பூா் வடக்கு தொகுதியில் 1லட்சத்து 95 ஆயிரத்து 147 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 89 ஆயிரத்து 558 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 118 போ் என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 823 வாக்காளா்கள் உள்ளனா். திருப்பூா் தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 004 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 39 ஆயிரத்து 576 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 35 போ் என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 615 வாக்காளா்கள் உள்ளனா். பல்லடம் தொகுதியில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 396 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 98 ஆயிரத்து 852 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 28 போ் என மொத்தம் 3 லட்சத்து 94 ஆயிரத்து 318 வாக்காளா்கள் உள்ளனா். உடுமலை தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 75 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 28 போ் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 119 வாக்காளா்கள் உள்ளனா். மடத்துக்குளம் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 701 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 290 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 22 போ் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 13 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com