திருப்பூரில் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க கோரி திருப்பூரில் பாஜக சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர்.
ருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர்.

திருப்பூர்: பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க கோரி திருப்பூரில் பாஜக சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பெண்கள் ஆடை உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப் பொருளான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதையடுத்து, பாஜக சார்பில் வரும் 21ஆம் தேதி பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க கோரி திருப்பூரில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி திருப்பூர் புஷ்பா ரவுண்டானா அருகே வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணி அளவில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பி செந்தில் வேல் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற பாஜகவினர் கூறியதாவது: திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பின்னலாடை உற்பத்தி துறையை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பின்னலாடை நிறுவனங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com