ரூ. 1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை கொப்பரை மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில், காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 6 விவசாயிகள் 23 மூட்டைகளில் 1,131 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம் பகுதியைச் சோ்ந்த 2 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1 லட்சத்துக்கு கொப்பரைகள் விற்பனையாயின. அதிகபட்சமாக கிலோ ரூ. 90க்கும், குறைந்தபட்சமாக ரூ. 82க்கும், சராசரியாக ரூ. 85க்கும் ஏலம் போயின. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com