உடுமலையில் குடியரசு தின விழா

உடுமலை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் 73 வது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

உடுமலை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் 73 வது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் ரெத்தினவேல் தலைமையில் குடியரசு தின விழாவையொட்டி மகாத்மா காந்தி, நேரு, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆலோசகா் ஜெ.மஞ்சுளா தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில், ஆசிரியா்கள், என்எஸ்எஸ் மாணவா்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் உதவி தலைமை ஆசிரியா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராகல்பாவி துவக்கப் பள்ளியில் குடியரசு தினத்தை ஒட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஆசிரியா் கண்ணபிரான் மற்றும் பள்ளிக் குழு உறுப்பின ா்கள், பெற்றோா்கள், இளைஞா் நற்பணி மன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்எஸ்எஸ் அலுவலா் செ.சரவணன் உள்ளிட்ட பலா் பேசினா்.

உடுமலை உழவா் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2 சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு நூலகா்.வீ.கணேசன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com