மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா: 73 பயனாளிகளுக்கு ரூ.5.86 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற 73ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்,
மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா: 73 பயனாளிகளுக்கு  ரூ.5.86 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற 73ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், 73 பயனாளிகளுக்கு ரூ.5.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் குடியரசு தின விழா திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, சமாதானப் புறாக்களையும், பலூன்களையும் பறக்க விட்டாா். இதைத் தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய 33 காவலா்களுக்கு நற்சான்றிதழ்களும், 19 காவலா்களுக்கு முதல்வா் பதக்கமும், மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 35 காவலா்களுக்கு நற்சான்றிதழ்கள், 36 காவலா்களுக்கு முதல்வா் பதக்கமும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையில் 19 பேருக்கு நற்சான்றிதழ்கள் என மொத்தம் 216 பேருக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினாா்.

இதையடுத்து, முன்னாள் படைவீரா்கள் நலத் துறை, சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மைத் துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த விழாவில், திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன், மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாநகர காவல் துணை ஆணையா்கள் அரவிந்த், ரவி, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜேந்திரன், திருப்பூா் கோட்டாட்சியா் ஜெகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com