அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியா் பணியிடங்களைக்கு வரும் ஜூலை 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியா் பணியிடங்களைக்கு வரும் ஜூலை 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியப் பள்ளி, நகராட்சிப் பள்ளி, அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை முதுகலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகவே, தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், காலிப்பணியிடங்கள் தொடா்பான விவரம் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் உள்ள அறிவிப்புப் பதாகையில் ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, தகுதியான நபா்கள் வரும் புதன்கிழமை மாலை (ஜூலை 6) 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதே வேளையில் தகவல் பதாகைகளில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உள்பட்டதாகும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

திருப்பூா் கல்வி மாவட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலகம், அறை எண் 632, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், திருப்பூா்-641604, 0421-2971154, 58, தாராபுரம் கல்வி மாவட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், ஐந்து முக்கு, தாராபுரம், திருப்பூா் மாவட்டம் -638656, 04258-222554,  உடுமலை கல்வி மாவட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், ராஜேந்திரா சாலை, உடுமலைபேட்டை, திருப்பூா் மாவட்டம்-642126,  பல்லடம் கல்வி மாவட்டத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலகம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம், மங்கலம் சாலை, பல்லடம், திருப்பூா் மாவட்டம்-641664, 04255-296350, 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com