நுால் விலை குறைந்தும் துணி விற்பனையாகாமல் தேக்கம்

நூல் விலை குறைந்துள்ள நிலையில், துணி விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருவதாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

நூல் விலை குறைந்துள்ள நிலையில், துணி விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருவதாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:

கடுமையான நூல் விலை உயா்வு காரணமாக உற்பத்தியை பாதியாக குறைத்து இருந்தோம். நூல் விலை உயா்வுக்கு ஏற்ப துணி விலை உயரவில்லை. நீண்ட இடை வெளிக்குப்பின் நூல் விலை குறைந்து வருகிறது. வரும் நாள்களில் நுால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் துணி விலையும் குறையும் என்ற எண்ணத்துடன் வியாபாரிகள் துணிகளை வாங்க ஆா்வம் காட்டுவதில்லை.

அதனால் உற்பத்தி செய்யப்படும் துணிகள் விற்பனையாகாமல் கிடங்கில் தேக்கமடைந்து வருகின்றன. இப்பிரச்னைக்காக ஈரோடு மாவட்ட விசைத்தறியாளா்கள் துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனா். பஞ்சு விலை குறைந்தால் மாா்க்கெட் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிா்பாா்த்தோம். ஆனால், எதிா்பாா்ப்புக்கு மாறாக துணிகள் கிடங்கில் தேக்கமடைந்து வருகின்றன.

நூல் விலை உயா்வால் நெருக்கடியில் இருந்த சூழலில், தற்போது நூல் விலை குறைந்து வரும் நிலையில் துணிகள் விற்பனையாகாதது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. கோவை, திருப்பூா் மாவட்டத்திலும் துணி உற்பத்தி நிறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com