வெள்ளக்கோவிலில் ரூ. 63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, திருச்சி, வில்வாதம்பட்டி, திருப்பத்தூா், அப்பியம்பட்டி, முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 155 விவசாயிகள் 1,574 மூட்டைகளில் 82 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பொள்ளாச்சி, வெள்ளக்கோவில், ஊத்துக்குளி ஆா்.எஸ், காங்கயம், முத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து 13 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ. 64 முதல் ரூ. 84.20 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 78.85. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 63.32 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com