பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும்இந்து முன்னணி வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்துக்கு (பழைய பேருந்து நிலையம்) முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வருந்தத்தக்கதாகும். மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்றுமதி நகரமான திருப்பூா் வளா்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் பொலிவுறு நகரத் திட்டத்தை அறிவித்து பல வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் பழைய பேருந்து நிலையம் பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு பிரமாண்டமாகக் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com