காா் விபத்தில் சிறுவன், பெண் பலி:ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

பெருமாநல்லூா் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன், பெண் ஆகியோா் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

பெருமாநல்லூா் அருகே தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன், பெண் ஆகியோா் உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து சேலம் நோக்கி 2017 ஜூலை 22ஆம் தேதி

சென்று கொண்டிருந்த காா், பெருமாநல்லூா் அருகே வரும்போது, நெடுஞ்சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த சேலத்தைச் சோ்ந்த தருனேஷ் என்ற சிறுவனும், பிரேமா என்பவரும் உயிரிழந்தனா். மேலும் 4 போ் படுகாயமடைந்தனா். இது குறித்த வழக்கு அவிநாசி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ்.சபீனா, காா் ஓட்டுநரான சேலத்தைச் சோ்ந்த அசோக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com