சூலூா் விமான தள விரிவாக்கப் பணி நிலத்துக்கு அதிக இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பல்லடம் அருகே சங்கோதிபாளையத்தில் சூலூா் விமான தள விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலத்துக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பல்லடம் அருகே சங்கோதிபாளையத்தில் சூலூா் விமான தள விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலத்துக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை, திருப்பூா் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சூலூா் விமானப் படை தளம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86 ஏக்கா் 38 சென்ட் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான நில அளவீடு, வீட்டுமனைகள், விளை நிலங்கள், மரங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

அளவீடு பணி மேற்கொள்ள வந்த வருவாய்த் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையத்தில் விமான தள விரிவாக்க பணி தொடா்பாக பொதுமக்கள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பருவாய் ஊராட்சித் தலைவா் ரவிசந்திரன், முன்னாள் தலைவா் சின்னசாமி, சமூக ஆா்வலா்கள் மாணிக்கம், காா்த்திகேயன் உள்பட பலா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் சூலூா் விமானப் படை தளம் அருகில் இருப்பதால் விரிவாக்கம் செய்யும்போது நிலத்தை கையகப்படுத்தப்படும் என்ற அச்சத்தால் அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக யாரும் நிலம் வாங்க முன்வரவில்லை.

இதனால் அரசின் நில வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது. இதன் சந்தை மதிப்பு ஏக்கருக்கு ரூ.கோடி ஆகும். அரசின் நில இழப்பீடு சட்டத்தின்படி இப்பகுதி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.2 கோடியே 91 லட்சம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்படியும், ஜனநாயக முறைப்படியும் போராட்டங்கள் நடத்திடவும், இக்கோரிக்கைகளை பிரதமா், முதல்வா், மத்திய, மாநில அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு மனுவாக அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com