வடுகபாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சீரமைப்புப் பணிகள்

பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் சீரமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வடுகபாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சீரமைப்புப் பணிகள்

பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் சீரமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் வடுகபாளையத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப் பள்ளி 1956ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. தற்போது, இப்பள்ளியின் கட்டடம் சேதமடைந்து காணப்படுகிறது.

இதையடுத்து, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சிலா் கட்டடத்தை சீரமைக்க முன்வந்தனா். இதில் ரூ.30 லட்சம் செலவில் வகுப்பறைகளை ஸ்மாா்ட் வகுப்பறையாக மாற்றி தரைத்தளத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிப்பது, அருகில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை தூய்மைப் படுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியா் காஞ்சனாதேவி வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் அமைப்பின் நிா்வாகிகள் வைகோ பாலசுப்பிரமணியம், திண்டு பாலு, சத்தியமூா்த்தி, ரமேஷ்குமாா், மோகனகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணிகளை பூமிபூஜை செய்து நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தொடக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலா்கள் தண்டபாணி, சசிரேகா ரமேஷ்குமாா், சமூக ஆா்வலா் வினோத் வெங்கடேஷ், முன்னாள் கவுன்சிலா் வெங்கடேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com