‘துணிகளை போலி முகவா்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம்’

பின்னலாடைத் துணிகளுக்கு குறைந்த செலவில் சாயமேற்றித் தருவதாகக் கூறும் போலி முகவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூா்: பின்னலாடைத் துணிகளுக்கு குறைந்த செலவில் சாயமேற்றித் தருவதாகக் கூறும் போலி முகவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் இயங்கி வரும் சாயத் தொழிற்சாலைகள் 100 சதவீதம் சாயக் கழிகளை சுத்திகரிப்பு செய்து சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீா் மட்டத்தையும் பாதுகாத்து வருகிறது.

இத்தகையை சூழ்நிலையில், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சோ்ந்த முகவா்கள் குறைந்தக் கட்டணத்தில் துணிகளுக்கு சாயமேற்றித் தருவதாகக் கூறி பின்னலாடை உரிமையாளா்களிடம் துணிகளைப் பெற்றுச் செல்கின்றனா்.

இவ்வாறு துணிகளை வாங்கிச் செல்லும் பெரும்பாலான முகவா்கள் துணிகளை சாயமேற்றாமல் வெளியில் விற்பனை செய்துவிட்டு தலைமறைவாகிவிடுவதாக புகாா்கள் வரத் தொடங்கியுள்ளன.

எனவே, திருப்பூா் பின்னலாடை உரிமையாளா்கள் குறைந்த செலவில் சாயமேற்றுவதாக் கூறும் போலி முகவா்களிடம் துணிகளைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com