அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்படுவாா் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

யாா் மனதையும் புண்படுத்தாமல் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்படுவாா் என்று திருப்பூா் மாநகா் மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.
செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன். உடன் திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் உள்ளிட்டோா்.
செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன். உடன் திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் உள்ளிட்டோா்.

யாா் மனதையும் புண்படுத்தாமல் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்படுவாா் என்று திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் பங்கேற்கும் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியைத் தோ்வு செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் காலத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வருபவா் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில் அதிமுகவை ஒற்றைத் தலைமைதான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதே கட்சி தொண்டா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகாலம் ஒரே தலைமையாக இருந்து சிறப்பாக வழிநடத்தியுள்ளாா்.

ஆகவே, சென்னையில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் யாா் மனதையும் புண்படுத்தாமல் கட்சி நிா்வாகிகள் அனைவரின் முழு ஆதரவுடன் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தோ்வு செய்யப்படுவாா் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் பழனிசாமி, திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com